திரையுலகினர்களுக்காக தமிழக முதல்வர் பிறப்பித்த உத்தரவு. நன்றி தெரிவித்த நடிகர் நாசர்..!

2 days ago
ARTICLE AD BOX

தமிழ் திரையுலகினருக்காக 90 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து நடிகர் சங்க தலைவர் நாசர் நன்றி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் பகுதியில், சினிமா தொழிலாளர்களுக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, இந்த நிலம் வழங்கப்பட்டது. ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் எனக் குத்தகைக்கு 99 ஆண்டுகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த நிலத்தை புதுப்பித்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திரையுலகத்திற்கு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலத்தின் இன்றைய மதிப்பு 150 கோடி ரூபாயாகும். புதுப்பிக்கப்பட்ட அரசாணையை திரையுலகினருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க தலைவர் நாசர்,

"15 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி ஆட்சி காலத்தில் 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. தற்போது அந்த நிலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் ஐந்து சங்கங்கள் மூலம் ஒரு லட்சம் நபர்கள் பயன்பெறுவார்கள். அங்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு தொழிலாளர்கள் குடியிருப்பார்கள். அதேபோல் படப்பிடிப்புக்கான அரங்கங்களும் அமைக்கப்படும்," என்று தெரிவித்தார்.

Read Entire Article