ARTICLE AD BOX
செய்தியாளர்: மா.மகேஷ்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் இன்று நடிகை நமீதா தனது கணவருடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் அண்ணாமலையர் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்த அவருடன் பக்தர்கள் பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
அண்ணாமலையாரை தரிசித்த அவர்கள் உண்ணாமலை அம்மன் சன்னதி கொடிமரத்தின் அருகில் முட்டி போட்டு கையில் தாமரையை வைத்துக் கொண்டு மனமுருக சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பிடாரி அம்மன் திருக்கோயிலுக்கு வந்த நமீதா பிடாரி அம்மனை தரிசித்ததுடன் வில்வ மரத்தை சுற்றி வந்து தரிசனம் செய்தனர்.