ARTICLE AD BOX
இந்தியாவில் ஐபிஎல் திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வரும் மார்ச் 23ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டு சென்னை அணி கோப்பையை வெல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிளேஆப்களுக்கு தகுதி பெற தவறியது. இதனால் இந்த ஆண்டு எப்படியாவது பிளேஆப் செல்ல வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
மேலும் படிங்க: ஷிகர் தவான் to ஹர்பஜன் சிங்: சினிமாவிற்கு சென்று மொக்கை வாங்கிய 5 கிரிக்கெட் வீரர்கள்
பழைய பார்மில் தோனி
ரசிகர்கள் தாண்டி மற்ற அணிகளின் பார்வையும் தற்போது தோனி மீதுதான் உள்ளது. கடந்த இரண்டு சீசர்களாக கடைசி இரண்டு ஓவர்களில் மட்டுமே தோனி பேட்டிங் இறங்கினார். காரணம் அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் தான். ஆனால் தற்போது அவை அனைத்தும் குணமாகி உள்ளதால் இந்த ஆண்டு நம்பர் 5 அல்லது 6ல் தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பத்திரனா பந்தில் சிக்ஸர்
சென்னை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளராக இலங்கையை சேர்ந்த மதீஸா பத்திரனா இருக்கிறார். யார்க்கர்களுக்கு பெயர் பெற்ற இவர் கடந்த ஆண்டு காயம் காரணமாக பாதியில் வெளியேறி இருந்தார். இந்த ஆண்டு சென்னை அணியில் இணைந்து தற்போது பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பயிற்சி ஆட்டத்தின் போது தோனிக்கு வழக்கும் போல யார்க்கர் பந்தை வீசுகிறார். அதனை தோனி ஒரு ஹெலிகாப்டர் ஷாட்டின் மூலம் சிக்ஸருக்கு பறக்க விடுகிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
— Telugu Dhoni fans official (@dhonsim140024) March 18, 2025
அன்கேப்ட் பிளேயராக தோனி
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிசிசிஐ அன்கேப்ட் பிளேயர் விதியை மீண்டும் கொண்டு வந்தது. அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களை நான்கு கோடிக்கு அணிகள் தக்க வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. மேலும் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு சென்னை வந்த தோனி தனது டீசர்டில் 'ஒன் லாஸ்ட் டைம்' என்று எழுதி இருந்தார். தற்போது 43 வயதாகும் தோனி ஐபிஎல்ல் கேப்டனாக ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளார். கடந்த ஆண்டு தனது கேப்டன்சியை ருதுராஜிடம் கொடுத்துவிட்டு ஒரு வீரராக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தோனியின் பிட்னஸும் சற்று அதிகரித்துள்ளது. ஐபிஎல் 2025 தொடரில் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ