ARTICLE AD BOX
உடுமலை : உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலைக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபட்டு, பஞ்சலிங்க அருவியில் குளித்து செல்கின்றனர்.திருமூர்த்தி அணையை பார்வையிடும் சுற்றுலா பயணிகள், அதன் அருகே உள்ள பூங்கா பராமரிப்பின்றி பூட்டிக்கிடப்பதால், பொழுதுபோக்க இடமின்றி சாலையோரம் அமர்ந்து உணவருந்தி செல்வது வழக்கம்.
பூங்கா நுழைவு வாயிலில் காளை சிலை ஒன்று பல ஆண்டுகளாக இருந்தது. அதன் பின்னணியில் திருமூர்த்தி அணை ரம்மியமாக காட்சியளிக்கும்.இதையடுத்து, சுற்றுலா பயணிகள் காளை சிலை முன்பு நின்று செல்பி, போட்டோ எடுத்து செல்வது வழக்கம். இந்நிலையில், திடீரென அந்த காளை சிலை மாயமாகி உள்ளது. சிலையை பொதுப்பணித்துறையினர் அகற்றியதாக தெரிகிறது. காளை சிலை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீண்டும் சிலையை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருமூர்த்தி பூங்காவில் காளை சிலை மாயம் appeared first on Dinakaran.