ARTICLE AD BOX
நாக சைதன்யாவின் இரண்டாவது மனைவியான சோபிதா துலிபாலா திருமணம் முடிந்த கையோடு ஒரு முக்கிய முடிவெடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நாகார்ஜுனா குடும்பம்
தெலுங்கு திரையுலகில் நட்சத்திர குடும்பமாக நாகேஸ்வர ராவின் குடும்பம் பார்க்கப்படுகிறது.
அவரது மகன் நாகார்ஜுனா தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களும் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்கள்.
நாகார்ஜுனாவின் மகன்களில் ஒருவரான நாக சைதன்யா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாடலும், நடிகையுமான சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர், குடும்பம், சினிமா என இரண்டிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கடைசியாக நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகிய தண்டேல் திரைப்படம் வெற்றிநடைப்போட்டுக் கொண்டிருக்கிறது.
சோபிதாவின் முடிவு என்ன?
இந்த நிலையில், நடிகை சோபிதா துலிபாலா திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் கிளாமராக மட்டும் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளார்.
படங்கள் வரும் பொழுது அதில், வரும் காட்சிகளில் முத்த காட்சியோ, நெருக்கமான காட்சியோ இருந்தால் அதனை வேண்டாம் என நிராகரித்து விடுகிறாராம்.
ஏற்கனவே சமந்தா கிளாமராக நடித்ததால் தான் குடும்பத்துக்குள் பிரச்னை வந்தது என்று கூறப்பட்டது. இதனை மனதில் கொண்ட சோபிதா, திருமண வாழ்க்கையை தக்க வைத்து கொள்வதற்காக இது போன்ற முடிவை எடுத்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |