ARTICLE AD BOX
Tamil Nadu News: கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு ஒன்றினை அளித்துள்ளார்.
Tamil Nadu News: முதல் இரவில் உண்மையை கூறிய பெண்
அந்த மனுவில், சுந்தரமூர்த்தியின் மகன் கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன், இருவீட்டு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மணப்பெண் சாந்தினிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், அவர் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் முடிந்து முதல் இரவின் போது மணமகனிடம் தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamil Nadu News: கணவனுக்கு விஷம் கொடுத்தாரா மனைவி?
இதனால், கலையரசன் சாந்தினியை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும், மீண்டும் அந்த பெண்ணின் சொந்தக்காரர்கள் எல்லாம் சில நாட்களில் சரியாக விடும் என்று கூறிவிட்டு கார்த்தியின் வீட்டில் விட்டு சென்றுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி சாந்தினி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார் என்றும், இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது கார்த்தி புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மனுவில் சுந்தரமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சாந்தினி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்தியின் பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருமணம் ஆகி ஒரு மாதத்திற்கு உள்ளாக கணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த மனைவியின் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tamil Nadu News: குற்றச்சாட்டு இன்னும் உறுதியாகவில்லை
இருப்பினும், அந்த பெண் கணவனருக்கு விஷம் கலந்து கொடுத்தது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. கணவர் வீட்டில் இருந்து அந்த பெண்தான் விஷம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டி உள்ளனரே தவிர போலீசார் இன்னும் அதனை உறுதிப்படுத்தவில்லை. எனவே, தான் கணவன் - மனைவி இருவரின் பெயரும் இங்கு மாற்றப்பட்டிருக்கிறது.
Tamil Nadu News: நினைவுக்கு வரும் கிரீஷ்மா வழக்கு
கடந்த 2022இல் காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்த வழக்கில் காதலிக்கு சமீபத்தில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கிரீஷ்மா என்பவர், கேரளாவின் பராசலாவை சேர்ந்த ஷரோன் ராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், கிரீஷ்மா வீட்டில் தனியாக வரன் பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு கிரீஷ்மாவும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.
இதனால், கிரீஷ்மாவின் மீது ஷரோன் ராஜ் கோபமடைந்துள்ளார். இதையடுத்து, கிரீஷ்மா கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லை என கூறி ஷரோன் ராஜை வரவழைத்துள்ளார். இதனால், ஷரோன் ராஜ் அவரது நண்பருடன் கிரீஷ்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்ற ஷரோன் ராஜிற்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கிரீஷ்மா வழங்கி உள்ளார், ஷரோன் ராஜும் குடித்துவிட்டார். இருப்பினும் அதை குடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய பின்னர் ஷரோன் ராஜிற்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பின், ரத்த மாதிரி சோதனையில் அவர் விஷம் சாப்பிட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கிரீஷ்மா சிக்கினார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், இரண்டாண்டு காலமாக கேரள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த ஜன. 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனையும், அவரது குற்றத்திற்கு உடந்தையாக இருந்த கிரீஷ்மாவின் தாய் மாமா நிர்மல் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இத கண்டிப்பா செய்யுங்க.. இல்லைனா ரேஷன் அட்டை கேன்சலாகிடும்..
மேலும் படிக்க | TVK vs BJP: பாஜகவை விமர்சித்த விஜய்; அண்ணாமலை கொடுத்த பதிலடி!
மேலும் படிக்க | வானிலை அலர்ட்! தொடங்கியது மழை.. இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ