ARTICLE AD BOX

80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக இருந்தவர்தான் ரூபிணி. இவர் ரஜினியோடு மனிதன், ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். கமலோடு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் மற்றும் விஜயகாந்த் உடன் புலன் விசாரணை படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். இப்படி பல வருடமாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் இவர் குறித்த செய்தி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது இவர் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு விடுதியில் தங்க அறை ஏற்பாடு செய்வதற்காக ஒரு நபர் இவரிடமிருந்து 1.5 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் எந்த ஏற்பாட்டையுமே செய்யாத அவர் திடீரென்று தலை மறைவாகியுள்ளார். இதனை அடுத்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நடிகை ரூபினி ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார