ARTICLE AD BOX
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். உண்டியல் காணிக்கையாக ரூ.3.78 கோடி கிடைத்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று 80,871 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 24,257 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது.
அதில், ரூ.3.78 கோடி காணிக்கையாக கிடைத்தது. விடுமுறை நாளான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 10 அறைகளில் 8 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.