ARTICLE AD BOX

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார், நெ.1 டோல்கேட்டை சேர்ந்தவர் திருமலை (46).திருச்சி,தில்லைநகரில் உள்ள கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டரில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இன்று அந்நிறுவனத்தில் 30 அடி உயரத்தில் அமர்ந்து ஜன்னலை சுத்தம் செய்துகொண்டிருந்தார், அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி விமலா லட்சுமி (46) அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருச்சியில் பரிதாபம்:30 அடி உயரத்திலிருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாப சாவு..! appeared first on Rockfort Times.