திருச்சி மாவட்டத்தில் 157 வழித்தடங்களில் மினி பஸ் சேவை – விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு !

2 days ago
ARTICLE AD BOX

திருச்சி மாவட்டத்தில் 157 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது., புதிய விரிவான மினிப் பேருந்து 2024 திட்டம் தொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்குட்பட்டு திருச்சி மாவட்டத்தில் 157 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த வழித்தடங்களில் மினிப் பேருந்துகளை இயக்க விரும்புபவர்கள் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் பெறப்படும் பட்சத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு, சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருச்சி மாவட்டத்தில் 157 வழித்தடங்களில் மினி பஸ் சேவை – விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு ! appeared first on Rockfort Times.

Read Entire Article