திருச்சி: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன ஒரு நாள் பயிற்சி வகுப்பு "தொழில்முனைவோருக்கான Chat GPT" பயிற்சி வரும் 8ம் தேதி திருச்சியில் நடக்க உள்ளது. இதில் தொழில் முனைவோர் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால இந்த 8ம் தேதியை உங்க டைரியில் குறிச்சுக்கோங்க...!

தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய தொழில்களை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம் ஏற்கனவே பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன.

வேலைவாய்ப்பு மட்டும் இன்றி இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் அவசியமாகிறது. அந்த வகையில் தொழில் முனைவோர் தங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் சாட் ஜிபிடி மூலம் தமிழ்நாடு அரசு பயிற்சி அளிக்கிறது. ரொம்ப அவசியமான பயிற்சி இது. தவற விட்டு விடாதீர்கள்.

இதற்கான முகாம் திருச்சியில் வரும் 8ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் கலந்து கொண்டு நீங்களும் தொழில் முனைவோராக மாறலாம். இதுகுறித்து வெளியாகி உள்ள அறிவிப்பில்," தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை இந்த பயிற்சி வகுப்பு வழங்கப்பட உள்ளது.

பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள்: ChatGPT அறிமுகம் மற்றும் ப்ராம்ப்ட் நுணுக்கங்கள்: ChatGPT-இன் திறன்கள் மற்றும் வணிக தேவைகளுக்கேற்ப பொருத்தமான ப்ராம்ப்ட்டுகளை எழுதும் திறன்களை கற்றுக் கொள்ளுங்கள்.

தெளிவான இலக்கு நிர்ணயம்: ChatGPT-இன் உதவியுடன் உங்கள் நோக்கம் மற்றும் இலக்குகளை சரியான வழியில் அமைக்கவும், செயல்படுத்தவும் கற்றுக் கொள்ளுங்கள்.

மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் யுக்திகள்: ChatGPT-ஐ பயன்படுத்தி புதுமையான மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக திட்டமிடல் உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள்.

கான்டென்ட் உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் ஈர்ப்பு: தாக்கம் செய்கிற கான்டென்ட் உருவாக்கவும், வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்தவும் AI கருவிகளை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

செயல்திறன் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு உத்திகள்: வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்கவும். ChatGPT-ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள். அட்டகாசமாக தொழில்முனைவோராகி உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றப்பாதையில் பயணியுங்கள். அதனால மறக்காதீங்க. வரும் 8ம் தேதி பயிற்சி இருக்குங்க. உங்க டைரியில தேதியை நோட் பண்ணிக்கோங்க.