திருச்சி ஜாமியா ஆயிஷா நிஸ்வான் பெண்கள் அரபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா…! (வீடியோ இணைப்பு)

2 days ago
ARTICLE AD BOX

திருச்சி-தஞ்சை ரோடு சீர்மிகு அல் முஹம்மதியா பள்ளிவாசலில் அமைந்திருக்கும் ஜாமியா ஆயிஷா பெண்கள் அரபி கல்லூரியில் சனது எனப்படும் பட்டமளிப்பு விழா நேற்று (பிப்.23) காலை 9 மணி அளவில் நடைபெற்றது. விழாவினை பள்ளிவாசல் இமாம் சாதிக்பாஷா கிராத் ஓதி துவக்கி வைத்தார். ஜிலானி பாஷா தலைமை தாங்கினார். முகமது மைதீன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளிவாசலின் முத்தவல்லி முஹம்மது அன்சாரி சாஹிப், பட்டம் பெரும் மாணவிகளின் பெற்றோர்களிடம் பட்டம் மற்றும் கேடயம், சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் அல் அமீன், ஹசன் முஹம்மது, அசதுல்லா, முஹம்மது யூனுஸ் ஆகியோர் அரபி கல்லூரி சிறப்புகளை எடுத்துக் கூறினர். விழாவில் முகமது ஜக்கரியா, கலிலுல் ரஹ்மான், இஸ்மாயில், முகமதுபாரூக், ராஜ் முஹம்மது, எம்.எஸ் முகமது ரபி, ஷாஜஹான், அமிரூதீன், பி.முகமதுரபி, இஸ்மாயில் தமீம் ஆகியோர் பட்டம் பெற்றவர்களின் குடும்பத்தினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். முடிவில் சுமார் 30 மாணவிகளுக்கு 45 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில், சமுதாய பெரியோர்கள், மஹல்லா மக்கள், வியாபாரிகள், தொழில்துறையினர் என அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

The post திருச்சி ஜாமியா ஆயிஷா நிஸ்வான் பெண்கள் அரபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா…! (வீடியோ இணைப்பு) appeared first on Rockfort Times.

Read Entire Article