திரிஷாவிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது: 37 வயதாகும் நடிகை வேதிகா ஆர்வம்..

11 hours ago
ARTICLE AD BOX
actress vedhika decides not to get married shocking reason

தனது திருமணம் எப்போது என்பது தொடர்பாக வேதிகா தெரிவித்த வாசகங்கள் பார்ப்போம்..

அர்ஜூனுக்கு ஜோடியாக ‘மதராஸி’ படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமான வேதிகா, பின்னர் ராகவா லாரன்ஸின் ‘முனி’ படத்தில் நடித்து பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து சக்கரகட்டி, காளை, மலை மலை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3, பேட்ட ரேப் ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழ் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஹீரோயினாக நடித்தார். தற்போது ‘கனா’ என்கிற கன்னட படத்திலும் ‘கஜானா’ என்கிற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிக்க வந்து 19 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் முதல் படத்தில் பார்த்த அதே லுக்கிலேயே இருக்கிறார். இதற்கான காரணம் குறித்து வேதிகா கூறியதாவது:

’37 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுதான் என்னுடைய ஃபிட்னஸின் ரகசியம். அதேபோல் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இருக்க விரும்புகிறேன். அழகை பாதுகாத்து கொள்ளவும், ஃபிட்னஸை மெயின்டெயின் செய்யவும் திருமணமே வேண்டாம் என முடிவெடுத்து இருக்கிறேன்’ என கூலாக தெரிவித்துள்ளார்.

மேலும், திரிஷாவை ஃபாலோ செய்கிறீர்களா? என்றதற்கு, ‘அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது’ என்றார்.

actress vedhika decides not to get married shocking reasonactress vedhika decides not to get married shocking reason

The post திரிஷாவிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது: 37 வயதாகும் நடிகை வேதிகா ஆர்வம்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article