'திரில்லர்' படம் இயக்க ஆசைப்படும் மஞ்சிமா மோகன்

9 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

2015-ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான 'ஒரு வடக்கன் செல்பி' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அடுத்த ஆண்டே 'அச்சம் என்பது மடமையடா ' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழில், சத்ரியன், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இவர் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சுழல் வெப் தொடரின் 2-ம் பாகத்தில் நடித்திருக்கிறார். இது கடந்த 28-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், படம் இயக்க விரும்புவதாக மஞ்சிமா மோகன் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், 'படங்களை இயக்க ஆசைப்படுகிறேன். என்னால் திரைக்கதை எழுத முடியாது. ஆனால் எழுத்தாளர் எழுதும் கதையை திரையில் கொண்டு வர முடியும் என நம்புகிறேன். திரில்லர் படங்களை இயக்குவது எனக்கு கனவு. இன்னும் 5, 6 ஆண்டுகளில் ஒரு படத்தை இயக்குவேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்றார்.

Read Entire Article