ARTICLE AD BOX
எந்த பொழுதுபோக்கு அம்சமும் இல்லாத காலக்கட்டத்தில் திரைப்படங்கள் அதிக நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தன. அந்த வகையில் 1944-ம் ஆண்டு வெளியான ஹரிதாஸ் படம் 3 ஆண்டுகளில் திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தில் தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் உள்ளிட்டோ நடித்திருந்தனர். அதன்பின்னர் பல படங்கள் வெற்றிகரமாக ஓடினாலும் சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.
பின்னர் மூன்றாம் பிறை, கரகாட்டகாரன், ஒரு தலை ராகம், கிழக்கே போகும் ரயில், பயணங்கள் முடிவதில்லை உள்ளிட்ட பல படங்கள் ஓராண்டுக்கு மேல் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. அதன்பின்னர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், மோகன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த பல படங்கள் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடின. அஜித், விஜய் படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படம் ஒரு வாரத்திற்கு மேல் ஓடினாலே பெரிய விஷயம் என்ற நிலையே உள்ளது. அதிலும் 50 நாட்கள், 100 நாட்கள் எல்லாம் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
1000 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடும் படம்
ஆனால் ஒரு படம் திரையரங்குகளில் 1,000 நாட்களுக்கு மேல் ஓடி இன்னும் திரையிடப்படுகிறது என்றால் சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை தான். ஆனால் அது ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களின் படம் இல்லை. சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், காதலர் தினத்தை ஒட்டி திரையரங்குகளில் விண்ணை தாண்டி வருவாயா படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில், வகையில், மீண்டும் வெளியிடப்பட்ட விண்ணைத்தாண்டி வருவாயா இப்போது சென்னையில் உள்ள பிவிஆர் சினிமாஸில் 1,000 நாட்கள் திரையிடப்பட்டுள்ளது.
விண்ணைத்தாண்டி வருவாயா படம் காலத்தால் அழியாத கிளாசிக் என்ற படம் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு தமிழ் படம் இந்த சாதனையை படைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிம்பு, த்ரிஷா, விடிவி கணேஷ், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இன்றும் பலரின் பிளேலிஸ்டுகளை இந்த பாடல்கள் ஆக்கிரமித்து வருகிறது.
சிம்புவின் திரை வாழ்க்கை
ஒரு குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். தனது தந்தை டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிம்பு, தம், குத்து, கோவில் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் சிம்பு இயக்கி நடித்திருந்த மன்மதன் படம் அவருக்கு பிரேக் த்ரூவாக அமைந்தது.
இதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தாலும், ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகளையும் சிம்பு சந்தித்தார். பின்னர் 2010-ம் ஆண்டு வெளியான விண்ணை தாண்டி வருவாய் படம் கம் பேக்காக அமைந்தது. ஆனால் மீண்டும் வெற்றி தோல்வி படங்களை மாறி மாறி கொடுத்த சிம்பு பின்னர் மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.
இதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது, மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சிம்பு நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
Read More : 37 ஆண்டுகளுக்கு பின் மனைவியை பிரியும் நடிகர் கோவிந்தா.. அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
The post தியேட்டரில் 1000 நாட்களை கடந்து ஓடும் ஒரே தமிழ் படம் இது தான்..! கண்டிப்பா ரஜினி, விஜய் படம் இல்ல.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.