ARTICLE AD BOX
பிரபல நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்த தேர்தல் பிரிவு தலைவர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தனது குடும்பத்தைச் சுற்றியுள்ள அரசியல் தொடர்பான ஊகங்களை தெளிவுபடுத்த ஒரு தைரியமான நடவடிக்கையை எடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் டெய்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் டெய்சி. ஆதவ் அர்ஜுனாவும் நானும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருக்க தேர்வு செய்தோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து தொழில்முறை, அரசியல் முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் சுயாதீனமாக எடுக்கப்படுகின்றன, அதற்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
மேலும் படிக்க | சினிமா புகழ் மட்டும் போதாது! மீண்டும் விஜய்யை விமர்சித்த திருமாவளவன்!
இந்த அறிவிப்பு, ஒருவருக்கொருவர் வாழ்வில் நாம் ஈடுபடுவது குறித்து பரப்பப்படும் தவறான தகவல்கள், ஊகங்கள், வதந்திகள் மற்றும் யூகங்கள் அனைத்தையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாங்கள் இருவரும் தனித்தனியான வேலை வாழ்க்கையுடன் தனிப்பட்ட பார்வைகளைக் கொண்டுள்ளோம், நாங்கள் ஒருவருக்கொருவர் தனியுரிமை மற்றும் கருத்துக்களை மதிக்கிறோம். மற்றபடி பொய்யான கூற்றுக்களை யாரேனும் கூறினால் நாங்கள் எதிர்ப்போம். எங்கள் பரஸ்பர நலன் கருதி, எங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகளை, எங்கள் குடும்பத்தை ஒருவருக்கொருவர் தொழில் மற்றும் பொது வாழ்க்கையில் சிக்க வைப்பதைத் தவிர்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா பேச்சு
விகடன் புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை எதிர்த்து பேசியதற்காக ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்த ஆதவ்விற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைவர் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியிலும் ஆதவ் அர்ஜுன் மீண்டும் திமுகவை எதிர்த்து பேசினார். "தமிழகத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும், பிறப்பால் ஒருவர் தலைவர் ஆக கூடாது. ஆளுங்கட்சிக்கு தூக்கத்திலும் இந்த கூட்டத்தை எப்படி அழிப்பது என்று பற்றித்தான் சிந்தனை உள்ளது.
திமுக போன்ற அரசியல் கட்சிகளின் முறைகேடு மற்றும் ஊழலினால் தமிழகத்தின் கடன் 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, பெரும் கடனை தமிழகம் இன்று எதிர் கொண்டு வருகிறது. வெளிநாட்டில் பொருளாதாரத்தை உருவாக்கி ஊழல் செய்கின்றனர், ஆனால் தமிழ்நாட்டில் கடன் வாங்கி ஊழல் செய்கின்றனர். அரசியல் கட்சிகள் வெட்கமின்றி சாதி அரசியலை தங்களின் தேர்தல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு, சமூகப் பிளவுகளை ஆழமாக்கி, அநீதியை நிலைநிறுத்தும் தலைவர்களால் நிரம்பி வழிகிறது. இருப்பினும், இந்த வேரூன்றிய நிலையை சவால் செய்ய தயாராக இருக்கும் ஒரு மாற்றுதலைவராக விஜய் உருவாகி வருகிறார்" என்று ஆதவ் அர்ஜுன் பேசி இருந்தார். இந்நிலையில் அவரது மனைவி ஜெய்சியிடம் இருந்து அறிக்கை வெளியாகி உள்ளது.
ஆதவ் அர்ஜுனின் மாமனார் யார்?
ஆதவ் அர்ஜுனாவின் மாமனார் சாண்டியாகோ மார்ட்டின் இந்தியாவில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் திமுக, பாஜக போன்ற அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சமயத்தில் அதிகமாக நிதி கொடுத்ததாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். அவர் தேர்தல் பத்திரங்கள் மூலம் 1,368 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்து இருந்தார்.
மேலும் படிக்க | TVK vs BJP: பாஜகவை விமர்சித்த விஜய்; அண்ணாமலை கொடுத்த பதிலடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ