திமுகவை ஏன் வம்பிழுக்கிறீர்கள்? சீமானுக்கு விஜயலட்சுமி கேள்வி

4 hours ago
ARTICLE AD BOX

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட விஜயலட்சுமியுடன் நேரில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில், சீமானின் பேச்சுக்கு பதிலளிக்கும்வகையில் நடிகை விஜயலட்சுமி விடியோ வெளியிட்டுள்ளார். விடியோவில் அவர் பேசியிருப்பதாவது, ``சீமான் மீது வழக்கு தொடர திமுகவினர்தான் என்னை அழைத்து வந்தனர் என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது சீமான் கூறினார். என்னை யாரென்று தெரியாது என்று கூறியதுடன், காங்கிரஸார்தான் என்னை அழைத்து வந்ததாகக் கூறினார். மீண்டும் அவர் மீது வழக்கு தொடர்ந்தபோது, என்னை பாஜகவினர்தான் இயக்குவதாகக் கூறினார்.

2023-ல் மதுரை செல்வத்துடன் என்னிடம் பேச்சுவார்த்தை சீமான் வந்தார். மேலும், அவரைப் பற்றி வெளியில் பேசவேண்டாம் என்று கூறியதுடன் மாதந்தோறும் ரூ. 50,000 பணமும் அனுப்பினார். என்னிடமிருந்த விடியோக்களையும் பெற்றுக் கொண்டார். என்னை பொண்டாட்டி.. பொண்டாட்டி.. பொண்டாட்டி.. என்று அவர் அழைத்த விடியோக்களையும் காவல்துறையின் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால்தான், சீமானுடைய முதல் மனைவி விஜயலட்சுமியா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிக்க: நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது; என்ன செய்ய முடியும்? - சீமான் பேட்டி

இந்த மாதிரியான கேவலமான வேலைகளில் ஈடுபடுமாறு உங்களிடம் திமுக சொல்லவில்லை; பின்னர் ஏன் திமுகவை வம்பிழுக்கிறீர்கள்? என்னுடன் நேருக்குநேர் பேச அழைப்பு விடுத்துள்ளீர்கள். நான் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்னைப் பார்த்தால் எப்படி தெரிகிறது என்று கேள்வி கேட்பதற்காகவே நான் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

இரண்டு நாள்களுக்கு முன்பாகக்கூட, என்னுடன் சமாதானப் பேச்சுக்கு ஆள்களை அனுப்பினர். என்னுடைய பாவம் உங்களை எப்படியெல்லாம் படுத்தப்போகிறது என்று பாருங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விஜயலட்சுமி இந்த புகாரை திரும்பப் பெற்றபோதிலும் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

Read Entire Article