திமுகவின் தவறுகளை கிராமம்தோறும் கொண்டு சென்று வெளிப்படுத்துவோம்: அமித் ஷா உறுதி

1 day ago
ARTICLE AD BOX

Published : 23 Mar 2025 07:07 AM
Last Updated : 23 Mar 2025 07:07 AM

திமுகவின் தவறுகளை கிராமம்தோறும் கொண்டு சென்று வெளிப்படுத்துவோம்: அமித் ஷா உறுதி

<?php // } ?>

புதுடெல்லி: ‘‘ஊழல் மற்​றும் தவறுகளை மறைக்​கவே இந்தி எதிர்ப்பு போராட்​டத்தை திமுக நடத்​துகிறது. திமுகவின் தவறுகளை கிராமம்​தோறும் கொண்டு சென்று வெளிப்​படுத்​து​வோம்’’ என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா கூறி​யுள்​ளார்.

தமிழகத்​தில் ஆளும் திமுக அரசு தனது ஊழல்​களை​யும் தவறுகளை​யும் மறைக்க, அடிப்​படை இல்​லாமல் இந்தி மொழி எதிர்ப்பு போராட்​டத்தை பயன்​படுத்​துகிறது. ஆனால், திமுக.​வின் குற்​றச்​சாட்​டுக்கு மாறாக பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அரசு, இந்​திய மொழிகளை மேம்​படுத்த நடவடிக்கை எடுத்து வரு​கிறது. நாட்டு மக்​கள், மக்​கள் பிர​தி​நி​தி​கள், முதல்​வர்​களு​டன் அவர​வர் மொழிகளில் உரை​யாடு​வதற்​குப் பிரதமர் மோடி முயற்சி செய்​கிறார்.

மொழி​யின் பெய​ரால் நாட்டை துண்​டாட நினைக்​கும் சக்​தி​களுக்கு இதை ஒரு வலு​வான செய்​தி​யாக சொல்​கிறேன். ஒவ்​வொரு இந்​திய மொழி​யும் நமது கலாச்​சா​ரத்​தின் ஆபரண​மாக விளங்​கு​கிறது. இந்த நிலை​யில் தெற்​கில் உள்ள எந்த மொழியையோ அல்​லது ஒரு மாநிலத்​தையோ நாங்​கள் எதிர்க்​கிறோம் என்று அவர்​களால் உண்​மை​யிலேயே சொல்ல முடி​யு​மா?

மருத்​து​வம் மற்​றும் பொறி​யியல் பாடத் திட்​டங்​களை பிராந்​திய மொழிகளில் மொழிபெயர்ப்​ப​தற்கு மத்​திய அரசு தீவிர​மாக பணி​யாற்றி வரு​கிறது. மருத்​து​வம், பொறி​யியல் பாடங்​களை தமிழில் மொழிபெயர்க்க கடந்த 2 ஆண்​டு​களாக தமிழக அரசை வலி​யுறுத்தி வரு​கிறோம். ஆனால், திமுக அரசுக்கு அதற்​கான தைரி​யம் இல்​லை. ஏனெனில் அவர்​களுக்கு வரும் பணம், இத்​துடன் தொடர்​புடையது. தமிழகத்​தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால் மருத்​து​வம், பொறி​யியல் பாடங்​களை தமிழில் கற்​றுத் தரு​வோம். ஆனால், மொழி​யின் பெய​ரால் விஷத்தை பரப்பி வரு​கின்​றனர்.

ஆயிரம் கிலோ மீட்​டருக்கு அப்​பால் இருந்து வந்த ஆங்​கிலத்தை நீங்​கள் விரும்​பு​கிறீர்​கள். ஆனால், இந்​திய மொழிகள் உங்​களுக்கு பிடிக்​க​வில்​லை. வளர்ச்​சி​யைப் பற்றி பேசுங்​கள். ஆனால் உங்​கள் தவறுகளை​யும் ஊழல்​களை​யும் மறைக்க இந்தி எதிர்ப்பு போராட்​டத்தை நடத்​துகிறீர்​கள். உங்​களு​டைய தவறுகளை தமிழகத்​தின் கிராமங்​கள்​தோறும் எடுத்​துச் சென்று அம்​பலப்​படுத்​து​வோம்​. இவ்​வாறு அமித்​ ஷா பேசி​னார்​.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article