திமுக வேரோடு பிடுங்கப்படும்: அண்ணாமலை

1 day ago
ARTICLE AD BOX

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

கோவை பீளமேடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் பொன். ராதா கிருஷ்ணன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட கட்சியின் மூத்தத் தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது, ``ஒவ்வொரு மாநிலமாக பாஜக ஆட்சியை பிடித்துக் கொண்டு வருகிறது. பாஜகவின் வளர்ச்சி தமிழக மக்கள் மனதில் நிலைகொள்ள ஆரம்பித்து விட்டது. வேகமாக வளர்வதால் நம்மீது கல்லை வீசுகின்றனர்.

இதையும் படிக்க: மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

நடுத்தர மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி யோசித்து மருந்தகத்தை ஆரம்பித்தால், அதனை தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. ஆனால், அதையே காப்பியடித்து முதல்வர் மருந்தகம் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பித்துள்ளார். 2026-ல் திமுக வேரோடு பிடுங்கப்பட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்.

புதிய தலைவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நமது கடமை. அரவிந்த் கேஜரிவால் , மம்தா பேனர்ஜி வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். அவர்களைப் போலவே, நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் 2026-ல் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. சிவபெருமான்போல விஷத்தை உண்டு வெற்றியை நோக்கி நாம் செல்ல வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Read Entire Article