ARTICLE AD BOX

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானா பிசிறு என்று குறிப்பிடப்பட்ட மகளிரணி பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் , காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ தாரகை ஹெர்பர்ட் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் காளியம்மாள் பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியின் அழைப்பிதழில் சமூக செயற்பாட்டாளர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக, காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்ற கூட்டத்தில் அவர் கலந்து கொண்டதே சர்ச்சையை கிளப்பிய நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல் இருந்தது அவர் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டார் என்றே கருத்தை எழுப்பியது.
இந்நிலையில் காளியம்மாள் செய்தியாளர்களிடம் பேசிய போது நாம் தமிழர் கட்சியிலிருந்து எப்போது விலகுவேன் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். திமுக வில் சேரப்போகிறாரா அல்லது தவெக வில் சேரப்போகிறாரா என்பதே தற்போது அவருடைய ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தான் காளியம்மாளை திமுகவுக்கு அழைத்து வரும் முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.திமுகவில் மாநில அளவில் துணை அமைப்பாளார் பொறுப்பு தரப்படலாம் என்றும் தெரிகிறது. உடன் எத்த்னை பேரை அழைத்து வ்ருவார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.