ARTICLE AD BOX

திமுக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சிகள், சாதி மத ரீதியிலான அனைத்துக் கொடிக் கம்பங்களையும் 12 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சித்துறைக்கு சொந்தமான இடங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று துரைமுருகன் அறிக்கையில் கூறியுள்ளார். அகற்றப்பட்ட கொடிக்கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பங்களை அகற்றிட வேண்டும்
கழகப் பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் அவர்கள் அறிக்கை pic.twitter.com/2pgyOWTf4n