`திமுக கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது..!' - திருமாவளவன்

6 hours ago
ARTICLE AD BOX

"திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது. அதே நேரம், அதைக் காப்பாற்றும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆர்பாட்டத்தில்

உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நடந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன், செய்தியாளர்களிடம் பேசும்போது, "உயர் நீதிமன்றத்தில் 12 நீதிபதிகளை நியமிக்க உள்ளார்கள். இதில் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் உள்ள சில சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் நீதிபதியாக இல்லை. இது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றி நீதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியைப் பின்பற்ற இந்திய சட்டத்துறை அமைச்சரை, தமிழக சட்டத்துறை அமைச்சரும் வலியுறுத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். இதில் தமிழக அரசும் வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும்.

மதுரையில் மார்ச் 11-ம் தேதி மத நல்லிணக்கப் பேரணி நடத்த தென் மாவட்டத்திலுள்ள ஜனநாயக சக்திகள் அனுமதி கேட்டதற்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பேரணி எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல, அனைத்து மதத்தினரும் கலந்துகொள்ளக்கூடியது. எனவே மதுரை மாநகரக் காவல்துறை ஆணையர் அனுமதி வழங்க வேண்டும்.

திருமாவளவன்

திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, கூட்டணியில் கருத்து முரண்கள் இருந்தாலும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாகவும், கட்டுக்கோப்பாகவும் இருப்பதே எதிர்க்கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. சிலர் இல்லாததையும் பொல்லாததையும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக கூட்டணியில் இருந்துகொண்டே அனைத்து பிரச்னைகளுக்கும் விசிக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கூட்டணியில் விசிக-வுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது. அதே நேரம் அதைக் காப்பாற்றுவதற்கான பொறுப்பும் உள்ளது, விசிக எந்த இடத்திலும் பலவீனமடையவில்லை" என்றார்.

``தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எந்த மாநிலத்திலும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது!” - திருமாவளவன்
Read Entire Article