திமுக எம்.பிக்களுடன் ஸ்டாலின் நடத்திய அவசர ஆலோசனை.. 3 முக்கிய முடிவு!

11 hours ago
ARTICLE AD BOX

திமுக எம்.பிக்களுடன் ஸ்டாலின் நடத்திய அவசர ஆலோசனை.. 3 முக்கிய முடிவு!

Chennai
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்கும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவடைந்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது.

DMK MK Stalin chennai

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் வெடிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்தச் சூழலில், இதுகுறித்து ஆலோசிக்கும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுகவின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்களும் பங்கேற்றனர்.

மும்மொழிக் கொள்கைக்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், மக்களவைத் தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக தென்மாநிலங்களின் முதல்வர்கள், பாஜக அல்லாத மற்ற கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1. நிதிப்பகிர்வு, மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் முதலமைச்சரின் அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக துணை நின்று, நாடாளுமன்றத்திலும் இவற்றை முன்வைத்து போராடி வெற்றியை ஈட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2. மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

3. தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

More From
Prev
Next
English summary
As the 2nd session of the Budget Session of Parliament begins tomorrow, a meeting of DMK MPs was held at Anna Arivalayam in Chennai under the chairmanship of Chief Minister MK Stalin. Three important resolutions were passed in this meeting.
Read Entire Article