திமுக Vs பாஜக… வெடிக்கும் மோதல்… நேற்று Get Out Modi…. இன்று Get Out Stalin.. செம டிரெண்டிங்..!!!

3 days ago
ARTICLE AD BOX

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் Get Out Stalin என்று பதிவிட அந்த ஹேஷ்டேக் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. நேற்று திமுகவினர் Get Out Modi என்று பதிவிட்ட நிலையில் அதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று காலை 6 மணி வரை டைம் கொடுத்திருந்ததோடு அவர் சொன்னபடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கெட் அவுட் ஸ்டாலின் என்ற பதிவிட்டார். அதாவது மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் பாஜகவினர் இடையே பிரச்சனை என்பது ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசிடம் இருந்து நிதி வாங்கி தர முடியவில்லை என்று  அண்ணாமலையை உதயநிதி விமர்சித்திருந்தார்.

இதற்கு அண்ணாமலை துணை முதல்வர் உதயநிதியை ஒருமையில் பேசியதோடு அண்ணா சாலைக்கு வருகிறேன் என்று கூறினார். அதற்கு உதயநிதி துணிவிருந்தால் வர சொல்லுங்கள் என்று பதிலடி கொடுத்திருந்தார். மேலும் இந்த நிலையில் தற்போது இணையதளங்களில் இந்த ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் ப பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article