ARTICLE AD BOX
தினம்தோறும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
இந்த நவீன காலகட்டத்தில் உணவு முறை என்பது அனைவரிடையே மாறிக்கொண்டு தான் வருகிறது. சத்தான உணவு முறையை பின்பற்றுகிறோமா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். கையில் கிடைக்கும் உணவுகளை எல்லாம் குறிப்பாக பாக்கெட் உணவுகளை எல்லாம் சாப்பிட்டு வருகிறோம். இதனால் ஏற்படும் நோய்களும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. அனைவரும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற முயலுங்கள். இந்நிலையில் அன்றாட வாழ்வில் நாம் பழங்களை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. குறிப்பாக வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வாழைப்பழம் என்றால் ஒரு சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது. ஒரு சிலருக்கு பிடிக்கும். ஆனால் இந்த வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள் ஏராளம். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் இருந்து தப்பிக்கலாம். தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் குடல் இயக்கம் சீராக இருக்கும். வாழைப்பழங்களில் பல வகையான வாழைப்பழம் கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக ரஸ்தாலி, செவ்வாழை, கற்பூரவள்ளி, பூவம் பழம், மலை வாழைப்பழம் ,மொந்தம் பழம் என பல வகைகளில் கிடைக்கிறது. இந்நிலையில் இதில் எந்த வாழைப்பழத்தை வேணாலும் தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் இதயத்தை பாதுகாக்க முடியும். வாழைப்பழம் சாப்பிடும் போது நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும். இவ்வாறு நன்கு பழுத்த வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கற்கள் முழங்கால் வலி போன்றவை வராமல் தடுக்கும். மருத்துவ ஆராய்ச்சியில் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை வாழைப்பழம் தடுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே அனைவரும் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட மறந்து விடாதீர்கள்.