ARTICLE AD BOX
Ash Gourd Juice Benefits : தினமும் காலை வெறும் வயிற்றில் வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.

வெள்ளை பூசணி கோடை காலத்தில் அதிகமாக காணப்படும் ஒரு முக்கிய காய்கறியாகும். இது சாம்பல் பூசணி என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த பூசணியில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதாவது புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக காணப்படுகின்றன. வெள்ளை பூசணியை மக்கள் பல வழிகளில் எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் அதை கூட்டுப் பொரியல் செய்து சாப்பிடுகிறார்கள் இன்னும் சிலரோ அதில் புட்டு செய்து சாப்பிடுகிறார்கள் ஆனால் நீங்கள் எப்போதாவது வெள்ளை பூசணி ஜூஸ் குடித்திருக்கிறீர்களா?

வெள்ளை பூசணி ஜூஸ் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. குறிப்பாக தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படும். செரிமானத்தை மேம்படுத்துவதும் முதல் எடையை குறைப்பது வரை பல நன்மைகளை நமக்கு வழங்கும். இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் பல கடுமையான நோய்களை குணப்படுத்தலாம். இப்போது இந்த பதிவில் தினமும் காலை வெறும் வயிற்றில் வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், தினமும் வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி ஜூஸ் குடிக்க வேண்டும். இதில் கலோரி உள்ளடக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது. அதே சமயம் இதில் நீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளன. எனவே இது உங்களது வயிறை நீண்ட நேரம் நிரம்பி வைக்கும். மேலும் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கும். இதனால் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.
இதையும் படிங்க: உங்கள் சருமம் வெள்ளையாக மாறனுமா? அப்போ இந்த ஜூஸை குடிங்க..!!

மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக நம்முடைய உடலில் நச்சுக்கள் குவிய தொடங்கும். இத்தகைய சூழலையில், வெறும் வயிற்றில் வெள்ளை பூசணி ஜூஸ் குடித்தால் உடலை நச்சு நீக்கம் செய்யலாம். ஏனெனில் பூசணியில் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்ற பெரிதும் உதவுகிறது. வெள்ளைப் பூசணி ஜூசை தொடர்ந்து குடித்து வந்தால் பல கடுமையான நோய்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.
இதையும் படிங்க: White Pumpkin: வெள்ளை பூசணியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? அடடே..இத்தனை நாள் தெரியாம போச்சே...

வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிப்பதன் மூலம் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். ஏனெனில் இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும், குடலில் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கவும் மற்றும் வயிற்று தொடர்பான நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. எனவே இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் மலச்சிக்கல், அஜீரணம், வாயு மற்றும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

கோடைகாலத்தில் உடலில் நீரிழிப்பு பிரச்சனை அடிக்கடி ஏற்படும். வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். உண்மையில் பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. அதே சமயம் இதன் குளிர்ச்சியான விளைவு கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்..

வெள்ளைப் பூசணியில் வைட்டமின் சி மற்றும் ஆக்சிஜனேற்றிகள் ஏராளமாக உள்ளதால், இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதகின்றது. தினமும் வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதனால் பல தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.
குறிப்பு : வெள்ளை பூசணி ஜூஸ் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், நீங்கள் ஏதேனும் கடுமையான முயல் பாதிக்கப்பட்டு இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குடிக்க வேண்டாம் என்பதின் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்