ARTICLE AD BOX
தினமும் ரூ.333 கட்டினால், சொளையா ரூ.17 லட்சம் அள்ளலாம்.. செம வட்ட.. சூப்பரான தபால் அலுவலக சேமிப்பு
சென்னை: மிகச்சிறிய அளவிலான பணத்தை சேமிப்பதன் மூலம், ஒரு பெரிய தொகையை எளிதாக திரட்ட முடியும்.. அதற்கு உதவுவதுதான், போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்புத் திட்டம் (RD).. ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் பலன்கள் என்னென்ன தெரியுமா?
நாம் பாடுபட்டு உழைக்கும் பணத்தை சரியான முறையில் முதலீடு செய்வதன் மூலம், நல்ல பலனை பிற்காலத்தில் அடைய முடியும்... மிகப்பெரிய பலனை ஈட்ட முடியும்... அப்படியொரு உத்திரவாதமான லாபத்தை தரக்கூடிய பல்வேறு சேமிப்பு திட்டங்களை, அஞ்சலகங்கள் செயல்படுத்துகின்றன.

சில முக்கிய சேமிப்பு திட்டங்கள்
அந்தவகையில், சேமிப்பு கணக்கு ஐந்து ஆண்டுகள் தொடர் சேமிப்பு, செல்வமகள் சேமிப்பு திட்டம், பொதுமக்கள் வைப்பு திட்டம், மாதந்தோறும் வட்டி திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மகிளா சம்மான் சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம் உள்ளிட்ட திட்டங்கள் முன்மாதிரி திட்டங்களான உள்ளன.
முக்கியமாக, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் ஒருவேளை ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருந்தால், 55 வயதுக்கு பிறகும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக இருந்தால், 50 வயதுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தில் இணையலாம். அஞ்சலக சேமிப்பு திட்டங்களிலேயே இந்தத் திட்டத்திற்கு தான் அதிக வட்டி தரப்படுகிறது. இதன் வட்டி விகிதம், 8.2 சதவீதமாகும்.
ரெக்கரிங் டெபாசிட் திட்டம்
அதேபோல, ஆர்டி என்று சொல்லக்கூடிய ரெக்கரிங் டெபாசிட் திட்டம் என்றால் என்ன தெரியுமா? இந்த சேமிப்பு திட்டத்தை பற்றியும் நாம் அறிந்து கொள்வது அவசியம். தபால் அலுவலக தொடர் வைப்புநிதித் திட்டம் என்றும் சொல்வார்கள்.. இது உத்தரவாதமான வருமானத்தை தரக்கூடிய திட்டமாகும்.
இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் இணைய வேண்டுமானால், மாதம் ரூ.100 முதலீடு செய்து கணக்கை துவங்கலாம்.. அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.., இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 வருடம் என்றாலும், தேவைப்பட்டாலும், மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யலாம்.
ரிஸ்க் இல்லாமல் கிடைக்கும்
இந்த திட்டத்தில் தினமும் ரூ.333 முதலீடு செய்வதாக வைத்து கொண்டால், மாதம் ரூ.10,000 ஆகிறது. இதன் மூலம் வருடத்துக்கு 1.20 லட்சம் ரூபாய் மிச்சமாகும். அதாவது 5 வருட முதிர்வு காலத்தில் ரூ.6 லட்சத்தை டெபாசிட் செய்வீர்கள். இப்போது கூட்டு வட்டியை 6.7 சதவீதமாகப் பார்த்தால், அது ரூ.1,13,659 ஆக இருக்கும், அப்படியானால் உங்களின் மொத்த தொகை ரூ.7,13,659 ஆகிவிடும்
அதேபோல, ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், 5 ஆண்டு கால முடிவில் நீங்கள் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்து இருப்பீர்கள்.. இதில் 6.7 சதவீத வட்டியுடன் கணக்கு போட்டால், ரூ.56,830 வட்டியாகவே கிடைக்கும். அப்படியானால் 5 ஆண்டுகளில் ரூ.3,56,830 இருக்கும்.
நிலையான வட்டி - ஆலோசனை
இதையே நீங்கள் மேலும் 5 வருடத்துக்கு தொடர்ந்தால், மொத்தமாக 10 வருடங்களில் ரூ.6,00,000 முதலீடு செய்திருப்பீர்கள்.6.7 சதவீத வட்டியை சேர்த்தால் ரூ.2,54,272 வட்டியாக மட்டுமே கிடைக்கும். அப்படியானால், 10 வருடங்களில் ரூ.8.54 லட்சத்தை சேமிக்க முடியும்.. வட்டியும் நிலையாகவும், அதிகமாகவும் கிடைக்கும். எனவே உங்களது பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனையை பெற்று, இதுகுறித்து மேலும் அறிந்து கொள்ளலாம்.