ARTICLE AD BOX
கோழிக்கறி சுவையானதும், ஊட்டச்சத்து நிறைந்ததும் ஆகும். பலர் அதிக அளவில் இதனை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அல்லது பாடிபில்டிங் செய்பவர்கள் தினசரி கோழிக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. சிலர் கோழிக்கறியை மட்டுமே உணவாகவும் எடுத்துக் கொள்வது உண்டு. ஆனால், தினமும் கோழிக்கறி சாப்பிடும் போது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
கோழிக்கறியால் கிடைக்கும் நன்மை-பாதிப்புகள் :
1. அதிகளவிலான புரதம் சேர்க்கை :
கோழிக்கறி சிறந்த புரத மூலமாக செயல்படுகிறது. தினசரி இதை உணவில் சேர்ப்பதனால், தசை வளர்ச்சி விரைவாக நடைபெறும். உடலுக்கு தேவையான ஆற்றல் அளிக்கப்படுவதோடு, இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது.
2. மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் :
கோழிக்கறியில் செரிமானத்திற்கு உதவும் நியாசின் (Niacin), நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் பி6 , எலும்புகளுக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் மற்றும் தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் உறுதியாகும். மூளை செயல்பாடு அதிகரிக்கும் மற்றும் ரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெறும்.
3. கொழுப்பு அளவிற்கு நல்லதா? கெட்டதா?
கோழிக்கறியில் கொழுப்பு அளவு என்பது அதை எந்த விதத்தில் சமைக்கின்றீர்கள் என்பதை பொறுத்தது. பொரித்த கோழி அதிக கொழுப்பு சேர்க்கையை ஏற்படுத்தலாம். இது உடல் எடையை அதிகரிக்கலாம். ஆனால், வேகவைத்த அல்லது கிரில் செய்த கோழியைச் சாப்பிட்டால் குறைவான கொழுப்புடன் உடலுக்கு நல்ல சத்துக்கள் கிடைக்கும்.
4. இதய நோய்களின் அபாயம்:
மிதமான அளவில் உண்பது ஆரோக்கியமானது. ஆனால், தினமும் அதிக அளவில் கோழிக்றியை உண்பதால், அதில் இருக்கும் கொழுப்புகள் சிலர் உடலில் கொழுப்பு சேர்க்கையை அதிகரிக்கச் செய்யலாம். இது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தி, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.
5. செரிமான பிரச்சனைகள் :
மிக அதிகமாக கோழிக்கறி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் பாதிக்கப்படலாம். அதிகமான புரதம் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
6. ஹார்மோன் சமநிலை பாதிப்பு :
கோழி இறைச்சியில் சில விதமான ஹார்மோன்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் மிக அதிக அளவில் சாப்பிடுவதால் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு, பெண்களில் மாதவிடாய் கோளாறுகள் மற்றும் சரும பிரச்சனைகள் வரலாம்.
தினசரி கோழிக்கறி நல்லதா? கெட்டதா?
குறைந்த அளவில், ஆரோக்கியமான முறையில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சி உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், அதனை அதிகம் பயன்படுத்தினால் உடல் பருமன், இதய நோய்கள் மற்றும் செரிமான கோளாறுகள் வரலாம். எனவே, சமநிலையாக உண்பது சிறந்தது.
எது சரியான முறை?
* வாரத்தில் 3-4 முறை மட்டுமே உணவில் சேர்ப்பது நல்லது.
* வேகவைத்த அல்லது கிரில் செய்த முறையில் உண்பது உகந்தது.
* கூடுதல் ஊட்டச்சத்துக்கள் கிடைக்க காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளுடன் சேர்த்து உணவினை சமநிலைப்படுத்தலாம்.