தினமும் ஒரு முட்டை கட்டாயம் சாப்பிடுங்க... ஏராளமான நன்மை கிடைக்கும்

2 days ago
ARTICLE AD BOX

அதிகமான சத்துக்களைக் கொண்டுள்ள முட்டையை தினமும் சாப்பிட்டால் நாம் பெறும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

முட்டை

உயர் தரமான புரதம், தேவையான கொழுப்பு, உடலுக்கு அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொடுக்கும் முட்டையை நாம் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறைந்த விலையில் கிடைக்கும் மிகவும் எளிதான பொருள் என்றால் அது முட்டை தான். இதில் வைட்டமின் பி அதிகளவு நிறைந்துள்ளதுடன், வைட்டமின் பி12, பயோட்டின், ரிபோஃப்ளேவின், செலினியம் போன்ற சத்துக்களும் உள்ளது.

அது மட்டுமின்றி கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் அடங்கிள்ளது.

இவ்வாறு இதிலுள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும், சுறுசுறுப்பாகவும் வைக்கின்றது. தினமும் காலையில் முட்டை சாப்பிட்டு வந்தால் பல்வேறு ஆரோக்கிய நன்மையினை பெறலாம்.

முட்டையின் ஆரோக்கிய பயன்கள்   

தசைகள், மூளை, கண்கள், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட முட்டை பெரிதும் உதவுகிறது.

உடம்பை பிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் தினசரி கண்டிப்பாக முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

முட்டையில் உள்ள லுடீன் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தி, நினைவாற்றலை கூர்மைப்படுத்துவதுடன், எலும்புகளை வலுப்படுத்தவும், நல்ல கண்பார்வையையும் அளிக்கின்றது.

மீன், நட்ஸ் போன்ற உயர்தர உணவுகளில் கிடைக்கும் சத்துக்கள் முட்டை சாப்பிடுவதன் மூலமும் கிடைக்கின்றன.  

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், சத்துக்குறைவால் ஏற்படும் உடல் பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       
Read Entire Article