ARTICLE AD BOX
தினமும் ஒரு பெண்ணுடன் உறவு.. கேவலமான அப்பா.. கவர்ச்சி நடிகை சோனா கண்ணீர் பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்ற தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சில்க், டிஸ்கோ சாந்தி, புவனேஸ்வரி என பல நடிகைகள் உள்ளனர். சோனா என்றால் புகழை விட சர்ச்சைகள் தான் ஏராளம். சோனாவின் பெயருக்க பின்னால் பல ஹீரோக்களின் பெயர்களும் சேர்ந்தே செய்திகளில் வெளியாகியுள்ளன. காமெடி நடிகர்களில் இருந்து முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிபடுகிறது. ஆனால், கவர்ச்சி நடிகையாக வலம் வந்தாலும் தனது வாழ்வில் நடந்த சோகத்தை சமீபத்திய பேட்டியில் நடிகை சோனா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அறிமுகம்: அஜித், ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனா. அதில் ஜோதிகாவின் தோழியாக நடித்திருப்பார். அப்படத்தில் பார்த்தால் சோனாவா இது என பலரும் ஆச்சர்யப்படுவார்கள். ஹீரோயின் ரேஞ்சுக்கு ரொம்ப ஸ்லிம்மாக இருப்பார். வையாபுரிக்கு ஜோடியாக நடித்திருப்பார். பின்பு பாடம் நடத்தும் வாத்தியாரை காதலித்து திருமணம் செய்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

கவர்ச்சி நடிகை: முதல் படத்தில் ஹீரோயினுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், அதன்பின்பு கிடைத்த கதாப்பாத்திரங்கள் அனைத்தும் கவர்ச்சியான நடிகை பாத்திரம் தான் சோனாவிற்கு கிடைத்தது. தொடர்ந்து கவர்ச்சி குயினாக படங்களில் அவரை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு கிளாமர் நடிகையாகவே மாறிவிட்டார். அப்போது பெரிய வருத்தமாக தெரியவில்லை. நாள்கள் கடந்தாலும், நல்ல கதாப்பாத்திரம் கேட்டாலும் இல்லை மேடம் இது உங்களுக்கு இப்படியொரு கதாப்பாத்திரம் இருக்கு நடிக்கிறீங்களா என்பதை இயக்குநர்களே முடிவு செய்வதாக வேதனையுடன் சோனா தெரிவித்திருந்தார்.
பாண்டிச்சேரி பொண்ணு: சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் தனது குடும்பத்தை பற்றி தெரிவித்திருந்தார். இதில், பாண்டிச்சேரியை பூர்விமாக கொண்டவர் சோனா. அவரது தந்தை பிரிட்டிஷ் ஜெர்மனியை சேர்ந்தவர் என்றும் அம்மா ஸ்ரீலங்காவை சேர்ந்த பெண் என்றும் தெரிவித்தார். பலரும் என்னை எந்த ஊர் என்று கேட்டால் எந்த பதிலும் அளிப்பதில்லை. நான் எதை தேர்வு செய்வது என்பதே குழப்பம். அதனால், நான் பாண்டிச்சேரி பொண்ணு என்றே கூறிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.

மோசமான அப்பா: பல கசப்பான நிகழ்வுக் என் வாழ்வில் நடந்து விட்டன என சோனா கூறினார். அதில், 14 வயதிலேயே நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். இதனால், எது சரி தவறு என்று தெரியாது. ஒருநாள் வயதான கிழவன் என்னிடம் டபுள் மீனிங்கில் பேசி சிரித்தார். என் அப்பா மாதிரி ஒரு மோசமான மனிதரை பார்த்தது இல்லை. தினமும் ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பார். என் பாட்டி வீட்டில் தான் ஒரு பக்கம் அவரும் இன்னொரு பக்கம் வேறொரு பெண்ணும் நிற்பார்கள். அப்போது பஞ்சாயத்து நடக்கும். தினமும் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால் என் அம்மா மிகவும் சிரமப்பட்டார். பின்னர் என் அப்பா எங்களை விட்டு சென்றதும் நான் அம்மாவுக்காகவே வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன் என கண்ணீருடன் தெரிவித்தார்.
கெட்ட பொண்ணு: என் அப்பா என்னை பார்த்து மிகவும் மோசமானவள் நீ. ரொம்ப கெட்ட பொண்ணு, கேரக்டர் சரியில்லை என்றே கூறுவார். இதனால், ஒரு ஆணை போல 14 வயதில் என்னுடைய ரூட்டும் மாறியது. என் அப்பாவே என்னை தப்பானவள் என்று கூறும்போது மற்றவர்கள் கூறினால் எனக்கு என்ன ஆக போகிறது என்று தான் நினைத்தேன். இதனால், குடி, குத்தாட்டம், பார்ட்டி என இதுமாதிரியான தப்பான முடிவுக்குள் சிக்கிக்கொண்டேன் என சோனா தெரிவித்துள்ளார். அதேபோன்று சினிமா வாழ்வில் அட்ஜெஸ்ட்மெண்டும் விட்டுவைக்கவில்லை என தெரிவித்தார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்: இயக்குநர்கள், நடிகர்களை தாண்டி தயாரிப்பாளர்களும் என்னிடம் முயற்சித்தனர். அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் நடிகையாக வேண்டும் என்றால் அதற்காக நான் கவர்ச்சி காட்டி நடித்து விட்டு போகிறேன் என முடிவெடுத்தேன். கவர்ச்சி நடிகையாக வாழும் சூழலில் இருந்து தற்போது என்னை திருத்தி சரியான ஒரு வாழ்க்கையை வாழ முடிவு செய்துள்ளதாக நடிகை சோனா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.