ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/03/18/HRajFBguv8B8D6wFVB6G.jpg)
வாழை மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் உடையது. அந்தவகையில், இந்த வாழைப்பூவில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துகள் உள்ளன.
/indian-express-tamil/media/media_files/YhX3HyAcbVXs8Z9kJX7r.jpg)
தொற்று நோய் முதல் புற்றுநோய் வரை மொத்த ஆபத்துகளையும் நம்மிடம் நெருங்க விடாமல் செய்கிறது இந்த வாழைப்பூக்கள்.. பெண்களுக்கு இந்த பூக்களை, வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். காரணம், ஹீமோகுளோபின் பிரச்சனையை இந்த வாழைப்பூக்கள் சரிசெய்வதுடன், ரத்த விருத்தியையும் அதிகரிக்க செய்கிறது. சிகப்பு ரத்த அணுக்களை பெருக்கெடுக்க செய்யும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-22T201121.420.jpg)
மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு மற்றம் வயிற்றுவலியால் அவதிப்படும் பெண்கள், இந்த பூவை வேக வைத்து சாப்பிட்டால் குணமாகலாம்.. அதேபோல, இந்த வாழைப்பூவை தயிருடன் சேர்த்து சாப்பிடும்போது, உடலில் புரொஜெஸ்டிரான் ஹார்மோனை அதிகரிக்க செய்து, மாதவிடாய் ரத்தப்போக்கினை குறைக்கிறதாம்.. இதனால் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் தீரும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/uTRptCXZQpZZU0TIOwZg.jpg)
வாழைப்பூவில் வைட்டமின் C + ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைந்துள்ளன.. எனவே சருமத்தை காப்பதுடன், வயது முதிர்ச்சியையும் தள்ளிப்போடும் தன்மை இந்த வாழைப்பூக்களுக்கு உண்டு. சிறுநீரகம் சிறப்பாக இயங்கவும், பலப்படவும், சிறுநீரக பிரச்சனைகள் தீரவும், சிறுநீரக கற்கள் வெளியேறவும், இந்த வாழைப்பூக்கள் மருந்தாகின்றன.. இந்த பூவின் குருத்துகளை, சாப்பிட்டு வந்தாலே, வலியுடன் கூடிய கிட்னி கற்கள் கரைந்துவிடுமாம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/w0WLVnWcARCv0kJo4cwY.jpg)
மன அழுத்தத்தையும் குறைக்கின்றன.. வாழைப்பூவை உணவாக 2 வாரங்கள் சாப்பிட்டு வந்தாலே, ரத்தத்தில் கொழுப்புத்தன்மை, பசைத்தன்மைகள் குறைந்து ரத்த ஓட்டம் சீரடையுமாம். முக்கியமாக, ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளை கரைத்து, ரத்தத்தை இந்த பூக்கள் சுத்தப்படுத்துகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/9hTEhNMp8tOByN3qF5Rs.jpg)
மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. குறிப்பாக, ஆண்களுக்கு விந்துவை விருத்தி செய்யக்கூடியவை இந்த பூக்கள்.. ஆனால், வாழைப்பூவை வாழையில் இருந்து பறித்த, அடுத்த 2 நாட்களுக்குள்ளேயே சாப்பிட்டுவிட வேண்டுமாம். எனினும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இவைகளை உட்கொள்வது ஆரோக்கியமாகும்.