ARTICLE AD BOX
திண்டிவனம்: திண்டிவனத்தில் விசிக, பாமகவினர் மோதி கொண்டு கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், செஞ்சி பேருந்து நிலையம் அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் 220ம் ஆண்டு மாசி அமாவாசை மயான கொள்ளை திருவிழா ேநற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் வேடம் அணிந்து ஆடியபடி மயானக் கொள்ளை ஊர்வலத்தில் பங்கேற்றனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இரு கட்சியை சேர்ந்த இருதரப்பினர் போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி பாமக நிறுவனர் ராமதாசின் இல்லம் அருகே கொடியை வைத்து ஆடிச்செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்தாண்டு அதை தடுத்து, காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய நிலையில் திண்டிவனம் நேரு வீதி, பழைய நீதிமன்றம் எதிரில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து ஆடியபடி சென்றனர். அப்போது திடீரென 2 கட்சியினரும் தங்களது கொடியை உயர்த்தி வட்டமிட்டு ஆடியதால் பரபரப்பு நிலவியது. கட்சி கொடிகளை பயன்படுத்த காவல்துறை தடைவிதித்திருந்த நிலையில் அதையும் மீறி ஆடிச் சென்றனர்.
அப்போது அங்கிருந்த மர்ம நபர் திடீரென பாமகவினர் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இது அங்கிருந்தவர் மீது விழவே அவர் காயமடைந்தார். இதனால் அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் கலைந்து போக செய்தனர். அப்போது ஒருவருக்கொருவர் முண்டியடித்து ஓடியதால் சிறிதுநேரம் பதற்றம் ஏற்பட்டது.
The post திண்டிவனத்தில் விசிக-பாமகவினர் மோதல்,கல்வீச்சு appeared first on Dinakaran.