திடீரென வங்கி கணக்கில் இருந்து குறையும் ரூ.236.. குழம்பும் SBI வாடிக்கையாளர்கள்.. என்ன காரணம்?

4 days ago
ARTICLE AD BOX

திடீரென வங்கி கணக்கில் இருந்து குறையும் ரூ.236.. குழம்பும் SBI வாடிக்கையாளர்கள்.. என்ன காரணம்?

Chennai
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால்.. கடந்த சில வாரங்களில் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.236 பிடித்தம் செய்யப்பட்டு இருக்கும். நாம் யாருக்கும் பணம் அனுப்பவில்லை.. பிறகு ஏன் ரூ.236 பிடித்துள்ளனர் என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். எதற்காக இதுபோல ரூ.236ஐ பிடித்தம் செய்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ அதாவது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இருக்கிறது. நமது நாட்டின் பெரும்பாலான மக்கள் நிச்சியம் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பார்கள்.

bank SBI

வங்கி சேவை

இப்போதும் பல்வேறு உதவித்தொகைகள் மக்களுக்கு எஸ்பிஐ மூலமாகவே சென்றடைகிறது.. யுபிஐ வந்த பிறகு பெரும்பாலான மக்கள் வங்கிகள் பக்கமே செல்வதில்லை என்ற போதிலும் வங்கி சேவை முக்கியமானதாக இருக்கிறது. யுபிஐ அல்லது கார்டு என எதுவாக இருந்தாலும் வங்கி சேவை அத்தியாவசியமான ஒன்றாகவே இருக்கிறது.

பிடித்தம் செய்யப்படும் ரூ.236

இதற்கிடையே எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கடந்த சில வாரங்களில் ரூ.236 பிடித்தம் செய்யப்பட்டதாக மெசேஜ் வந்திருக்கும். நாம் யாருக்கும் பணம் அனுப்பவில்லை.. பிறகு ஏன் ரூ.236 பிடித்தம் செய்தார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். இது குறித்து வரும் எஸ்எம்எஸிலும் கூட தெளிவான தகவல் இருக்காது. இதனால் பலரும் குழம்பிப் போய் இருப்பார்கள். இது வேறு எதுவும் இல்லை உங்கள் டெபிட் கார்டு அதாவது ஏடிஎம் கார்டின் மெய்டன்ஸ் பீஸ் தான் அது.

எஸ்பிஐ சார்பில் கிளாசிக், சில்வர், குளோபல் என பல வகையான கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.200 பராமரிப்பு தொகையை வசூலிப்பார்கள். அதை தான் இப்போது பிடித்துள்ளனர். சார்ஜ் ரூ.200 என்றால் எதற்காக ரூ.236ஆக பிடிக்கிறார்கள் என நீங்கள் கேட்கலாம்.

இதுதான் காரணம்

இந்த பரிவர்த்தனைக்கு மத்திய அரசு 18% ஜிஎஸ்டி விதிக்கிறது. அதன்படி ரூ.200க்கு 18% ஜிஎஸ்டி என்றால் அது ரூ.36 வரும். இந்த இரண்டையும் சேர்த்தே ரூ.236 பராமரிப்பு தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது. அதேநேரம் பராமரிப்பு தொகை என்பது கார்டு வகைகளைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக கிளாசிக், சில்வர், குளோபல் கார்டுகளுக்கு ரூ.236 வசூலிக்கப்படுகிறது.

"இந்த" 2 ரூல்ஸ் முக்கியம்! இதை மட்டும் செய்தால் ஓய்வு பெறும்போது வங்கி கணக்கில் ரூ.20 கோடி கன்பார்ம்

அதேபோல யுவா/ கோல்ட்/ காம்போ/ மை கார்டு ஆகியவற்றுக்கு ரூ.250 + ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். அதேநேரம் பிளாட்டினம் கார்டுகளுக்கு ரூ.350+ ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். இது தவிர பிரைட் மற்றும் ப்ரீமியம் கார்டுகளுக்கு ரூ.425+ ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். இதுபோல ஒவ்வொரு டைப் கார்டிற்கும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்வார்கள்.

குழப்பத்திற்கு என்ன காரணம்

பிடித்தம் தொடர்பாக உங்களுக்கு வரும் மெசேஜ்ஜில் AMC எனக் குறிப்பிட்டு இருப்பார்கள். AMC என்றால் Account Maintenance Charge ஆகும். இதை முழுமையாகப் போட்டால் பலருக்கும் புரிந்துவிடும். ஆனால், AMC என மட்டும் குறிப்பிட்டு மெசேஜ் வருவதே குழப்பத்திற்கும் காரணமாக இருக்கிறது. மேலும் இந்தாண்டு மட்டுமின்றி இனி வரும்.ஆண்டுகளிலும் கூட நிச்சயம் பராமரிப்பு கட்டணத்தைப் பிடிக்கவே செய்வார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

More From
Prev
Next
English summary
know the reason behind about the unexpected ₹236 debit from your SBI savings account (திடீரென வங்கி கணக்கில் இருந்து போகும் ரூ.236.. குழம்பும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்): All Charges to be deducted from SBI.
Read Entire Article