ARTICLE AD BOX
சென்னை: ஒய் நாட் ஸ்டுடியோ சார்பில் பல படங்களை தயாரித்திருக்கும் எஸ்.சஷிகாந்த், ‘தி டெஸ்ட்’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். வரும் ஏப்ரல் 4ம் தேதி நெட்பிளிக்ஸில் பல்வேறு மொழிகளில் நேரடியாக வெளியாகும் இப்படம் குறித்து எஸ்.சஷிகாந்த் கூறியதாவது: இப்படம் ஒரேநாளில் உலகம் முழுக்க பல கோடி பார்வையாளர்களால் கவனிக்கப்படும் என்ற காரணத்தாலேயே நெட்பிளிக்ஸ் தளத்தை தேர்வு செய்தோம். கட்டிடக்கலை நிபுணரான நான், திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தயாரிப்பாளரானேன். 12 வருடங்களுக்கு முன்பு எழுதிய ‘தி டெஸ்ட்’ கதையை இப்போதுதான் இயக்க முடிந்தது.
இப்படத்தில் மூன்று கேரக்டர்களுக்கு கடினமான காலக்கட்டம் ஏற்படும்போது, எப்படி அதை எதிர்கொண்டு ஜெயிக்கிறார்கள் என்பது கதை. இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் நடப்பது போன்ற காட்சி இடம் பெறுகிறது. சித்தார்த் மற்றும் ரஞ்சி போட்டிகளில் விளையாடிய 22 நிஜ கிரிக்கெட் வீரர்கள் நடித்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மேட்ச் படமானது. மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், காளி வெங்கட், ‘ஆடுகளம்’ முருகதாஸ் சிறப்பாக நடித்துள்ளனர். பாடகி சக்தி கோபாலன் இசை அமைப்பாள ராக அறிமுகம் ஆகிறார்.