ARTICLE AD BOX
தன்னுடைய தாய்க்கு பராமரிப்புத் தொகை அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த நபருக்கு பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.
மேலும், இந்த வழக்கு, நாம் கலி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு சிறந்த சான்று என்று நீதிபதி கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாக் சிங் இறப்புக்குப் பின் அவருக்குச் சொந்தமான 12.5 ஹெக்டேர் நிலம் அவரது மகன் சிக்கந்தருக்கும், இறந்துவிட்ட இன்னொரு மகன் சுரீந்தரின் குடும்பத்துக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
பாக் சிங்கின் மனைவி அமர்ஜித் கவுர் தனது மகளுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதால், சிக்கந்தரும், சுரீந்தரின் மனைவியும் தனது அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிக்கந்தரும் சுரீந்தரின் மனைவியும் அமர்ஜித் கவுருக்கு மாதம் ரூ.5000 அளிக்க வேண்டும் என்று மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிரான சிக்கந்தரின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.