தாய், தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவிகள்

3 hours ago
ARTICLE AD BOX

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 105 தேர்வு மையங்களில் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்றது. விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் பிரபாகரன் மகள் ரித்திகா. இவரது தந்தை இரு தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதேபோல் இதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் முகையூரை சேர்ந்த மகிமைஆசானி தாய் அமலமேரி, செல்லியம்மன் கோயில் தெரு நூர்ஜகான் தந்தை ஜான்பாஷா ஆகியோர் கடந்த 5 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். தாய், தந்தை உயிரிழந்த துக்கத்திலும் மூன்று மாணவிகளும் நேற்று தேர்வு எழுதினர்.

சிவகங்கை, ராம்நகரைச் சேர்ந்த தர்மலிங்கம் (53), மகன் செந்தில்வேலன். மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 உயிரி-கணிதம் படித்து வருகிறார். நேற்று காலை தர்மலிங்கம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இருப்பினும், செந்தில்வேலன் நேற்றைய தேர்வை எழுதிவிட்டு வந்து தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.

The post தாய், தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவிகள் appeared first on Dinakaran.

Read Entire Article