தாயை திட்டியதால் ஆத்திரம்...மரக்கட்டையால் தந்தையை அடித்துக்கொன்ற மகன்

3 hours ago
ARTICLE AD BOX

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கோந்தாலி நகரை சேர்ந்தவர் அன்ஷுல் என்ற கவுரவ் பாபராவ் ஜெய்ப்பூர்கர் (19). இவர் அப்பகுதியில் மோட்டார் மெக்கானிக்காக பணிப்புரிந்து வந்துள்ளார். நேற்று காலை 11 மணியளவில் அன்ஷுல் மதிய உணவுக்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அன்ஷுலில் தந்தை பாபராவ் மதுகர் ஜெய்ப்பூர்கருக்கும் (52) அவரது தாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மதுகர் தனது மனைவியை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்ஷுல் ஒரு மரக்கட்டையை எடுத்து தனது தந்தையின் தலையில் அடித்துள்ளார். இதில் அன்ஷுலின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த போலீசார் அன்ஷுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், எந்த வேலையும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்ட அன்ஷுல் போலீசாரிடம் கூறியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Read Entire Article