தாயுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்; ஆத்திரத்தில் மகன்கள் செய்த காரியம்…

1 day ago
ARTICLE AD BOX

குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகே உள்ள மோக்சான் கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான ரத்தன் ஜி தாகூர். கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கு 27 வயதான சஞ்சய் தாகூர் என்ற மகனும், 23 வயதான ஜெய்ஷ் தாகூர் என்ற மகனும் உள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில், அந்தப் பெண்ணிற்கும் ரத்தன் ஜி தாகூருக்கும் இடையேயான பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசுவது மட்டும் இல்லாமல், மகன்கள் வீட்டில் இல்லாத போது இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இவர்களின் கள்ளத்தொடர்பு குறித்து அந்தப் பெண்ணின் மகன்களான சஞ்சய் தாகூர் மற்றும் ஜெய்ஷ் தாகூருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ந்துப் போன மகன்கள் இருவரும், ரத்தன் ஜி, மற்றும் தங்களின் தாயையும் கண்டித்துள்ளனர். இது போன்ற உறவு, இறந்துப் போன தங்களின் தந்தைக்கு துரோகம் செய்வது போன்றது என்று அறிவுரையும் கூறியுள்ளனர். ஆனால் ரத்தன் ஜி எதையுமே கண்டுக் கொள்ளவில்லை. இதனால் இளைஞர்கள் இருவரும், சமுதாய தலைவர்களை வைத்து பிரச்சனையை முடிக்க முயன்றனர்.

ஆனால் அப்போதும் ரத்தன் ஜி தனது கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. தொடர்ந்து, அவர் மகன்கள் இல்லாதபோது அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகன்கள் இருவரும், ரத்தன் ஜியை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இருவரும் கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து கொண்டு ரத்தன் ஜி மற்றும் அவரது நண்பர் ஜிகுஜி பர்மார் ஆகியோரை தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த ரத்தன் ஜி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து சஞ்சய் தாகூர் மற்றும் ஜெய்ஷ் தாகூர் ஆகியோரை கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.

Read more: உறவினருடன் மலைக்கு சென்ற பெண்; பலாத்காரம் செய்வதை வீடியோவாக எடுத்து மகிழ்ந்த இளைஞர்கள்..

The post தாயுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்; ஆத்திரத்தில் மகன்கள் செய்த காரியம்… appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article