தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள்: தெற்கு ரெயில்வே

12 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல்-மே மாதங்களில் விடப்படுகிறது. கோடை விடுமுறையின்போது பேருந்துகள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். எனவே கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் இருந்து 27-ம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் கோடை கால அதிவேக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.நாளை காலை 8 மணிக்கு சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் அதிவேக ரெயில்களாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


Read Entire Article