தாமதமாகும் 'கிரிஷ் 4'... இதுதான் காரணமா?

16 hours ago
ARTICLE AD BOX

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ படம் கிரிஷ். இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றநிலையில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. அதன்படி, கடைசியாக இதன் 3-ம் பாகம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது.

இதனையடுத்து, 4-ம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், 10 ஆண்டுகளை கடந்தும் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், கிரிஷ் 4 குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படம் ரூ. 700 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், இந்த பெரிய பட்ஜெட் காரணமாக எந்த தயாரிப்பு நிறுவனமும் இப்படத்தை தயாரிக்க முன் வரவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், கிரிஷ் 4 படத்தை யார் இயக்குவது என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது. இதனால் இப்படம் இன்னும் தாமதமாக வாய்ப்பு உள்ளது.�

Read Entire Article