ARTICLE AD BOX
மார்ச் 28ஆம் தேதி நடக்கவுள்ள தவெக பொதுக்குழு கூட்டப் பணிகளை மேற்கொள்ள அக்கட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி வரவேற்புக் குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்பக் குழு உள்ளிட்ட 5 குழுக்களை அக்கட்சி அமைத்துள்ளது.
நடிகர் விஜய் தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வருகிற மார்ச். 28 அன்று நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறுகிறது.
கனிமா! ரசிகர்களை உருக வைத்த பூஜா ஹெக்டே!
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அண்மையில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

