தவிக்கும் தாம்பரம்.. பல்லாவரம் -குன்றத்தூர் நான்கு வழிச்சாலை குறித்து தமிழக அரசு விளக்கம்

17 hours ago
ARTICLE AD BOX

தவிக்கும் தாம்பரம்.. பல்லாவரம் -குன்றத்தூர் நான்கு வழிச்சாலை குறித்து தமிழக அரசு விளக்கம்

Chennai
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்லாவரம் முதல் தாம்பரம் வரை உள்ள பகுதிகளில் எப்போதுமே நெரிசல் அதிகமாக இருக்கும். அதேபோல் பல்லாவரம் குன்றத்தூர் சாலையிலும் நெரிசல் அதிக அளவில் இருந்து வருகிறது. பல்லாவரம் முதல் குன்றத்தூர் வரை உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தினால், பலர் குன்றத்தூரை பிடித்து அப்படியே அவுட்டர் ரிங் ரோடு வழியாக போய்விட முடியும். எனவே பல்லாவரம் - குன்றத்தூர் நான்கு வழி சாலை எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் உள்ளது. இதுபற்றி அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்

சென்னையை பொறுத்தவரை எல்லா சாலைகளுமே நான்கு வழிச்சாலைகள் தான். ஆனால் ஒரு சில சாலைகள் மட்டும் இன்னும் நான்கு வழிச்சாலையாக மாறவில்லை. அப்படி நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படாத எல்லா சாலைகளிலும் நெரிசல் அதிகமாக உள்ளது. அதில் மிக முக்கியமான சாலை பல்லாவரம்-குன்றத்தூர் சாலை.

Minister EV Velu replied when the Pallavaram - Kundrathur four-lane road will start

இதில் பல்லாவரம்-குன்றத்தூர்-பூந்தமல்லி சாலையாக உள்ள இந்த சாலை மிகவும் நெரிசல் மிகுந்த குறுகலான சாலையாகும். இது பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி பூந்தமல்லியில் உள்ள குமணஞ்சாவடியில் முடிகிறது. இந்த சாலை பம்மல் பிரதான சாலை என்று அழைக்கப்படுகிறது. இந்த சாலையில் பம்மல், அனகாபுத்தூர், குன்றத்தூர், மாங்காடு மற்றும் குமணஞ்சாவடி வரை செல்கிறது. இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றினால், பூந்தமல்லி. குன்றத்தூர் வழியாக சென்னைக்கு வெளியே செல்லும் மக்கள் பயணிப்பது எளிதாக இருக்கும். அதேபோல் எல்லாரும் தாம்பரத்திற்கு நுழைவது குறைந்து நெரிசலும் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பல்லாவரம் - குன்றத்தூர் நான்கு வழி சாலை குறித்து திமுக எம்எல்ஏவான கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ.வான கருணாநிதி நேற்று பேசும்போது, "பல்லாவரம் தொகுதியில் 8 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், குன்றத்தூர் சாலை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டுமென்று கடந்த சட்டமன்றத்தில் தெரிவித்து அதற்கு அமைச்சர் அனுமதியும் வழங்கி இருந்தார். அந்த இடத்தில் 14 வீடுகளுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்பட்டுவிட்டது, மீதமுள்ள 200 வீடுகளுக்கு தான் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அந்த தொகையை வழங்கி விட்டால் இந்த ஆண்டிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த இருவழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுமா" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், பல்லாவரம் பகுதியில் இருந்து குன்றத்தூர் சாலையை இணைத்து விட்டோம் என்றால் தாம்பரம் பகுதியில் ஏற்படும் கூட்ட நெரிசல் கூட குறைந்துவிடும். அதில் உள்ள பிரச்சினை என்ன என்றால் பல்லாவரம் வியாபாரிகள், வர்த்தகர்கள் அதிகமாக இருக்கின்ற பகுதி. இந்த காரணங்களால் அந்த சாலையில் கட்டுமானம் என்பது அதிக அளவில் இருக்கிறது. அதன் விலைகள் என்று பார்க்கும்போது கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்க வேண்டும் என்ற சூழல் இருந்து வந்தது.

Minister EV Velu replied when the Pallavaram - Kundrathur four-lane road will start

அதனால் தான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆனது. முதல்வர் ஸ்டாலின், பல்லாவரம் திட்டம் குறித்து அதிகம் அறிந்தவர். எனவே மீண்டும் அவரிடம் வலியுறுத்தி தேவையான அளவிற்கு பணத்தை ஒதுக்கி அந்த நிலம் எடுப்பு பணிகள் முடிந்து விட்டால் அந்த சாலை போடப்படும்" என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

More From
Prev
Next
English summary
If the road from Pallavaram to Kundrathur is widened to a four-lane road, many people will be able to take Kundrathur and go directly via the Outer Ring Road. Therefore, there are questions as to when the Pallavaram - Kundrathur four-lane road will be built. Minister E.V.Velu has given an answer to this.
Read Entire Article