"தவறான தகவலை தர்மேந்திர பிரதான் பரப்புகிறார்": அன்பில் மகேஷ் மறுப்பு

12 hours ago
ARTICLE AD BOX

தேசிய கல்விக் கொள்கையில் மத்திய கல்வி அமைச்சர் தவறான தகவல்களை பரப்புகிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

Advertisment

முன்னதாக, பி.எம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததாக அறிக்கை ஒன்றை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டிருந்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தனது தரப்பு விளக்கத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "மாண்புமிகு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே, தவறான தகவல்களை பரப்புவதால் உண்மைகள் மாறாது

Advertisment
Advertisements

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்க்கிறது. ஏனெனில், அது எங்களுடைய வெற்றிகரமான கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

எங்களது நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் இல்லை. 15/3/2024 தேதியிட்ட கடிதம், தேசிய கல்விக் கொள்கைக்கான ஒப்புதல் அல்ல.
மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் போது மட்டுமே மத்திய அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது. அதற்காக கண்மூடித்தனமாக எந்த திட்டத்தையும் ஏற்க முடியாது.

அந்தக் கடிதத்தில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அந்தக் குழுவின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படுத்துவது குறித்து முடிவு செய்வோம் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Hon. Union Minister @dpradhanbjp avargal,

Spreading misinformation won’t change the facts.

Tamil Nadu has consistently opposed NEP 2020 because it undermines our successful education model .

There’s no “sudden change in stance.”
The letter dated 15/3/2024 is not an…

— Anbil Mahesh (@Anbil_Mahesh) March 11, 2025

 

யாரேனும் அரசியலில் ஈடுபட்டால், அது தேசிய கல்விக் கொள்கையை திணிக்கவும், தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை சிதைக்கவும் முயற்சிப்பவர்களாக தான் இருக்கும். 

தமிழ்நாட்டின் கல்வி முன்னுதாரணமானது. அது, நமது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனை தொடர்ந்து நிரூபித்துள்ளது.

இந்தியாவின் பன்முகத்தன்மை பலவீனம் அல்ல; பலம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். 

தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எது சிறந்தது என்பதைத் தேர்வு செய்யும் உரிமையை அங்கீகரித்து, ஆதரிப்பதன் மூலம் நீங்கள் உண்மையில் தமிழகம் மற்றும் அதன் மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த சேவையை செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read Entire Article