ARTICLE AD BOX
அமெரிக்காவின் வர்ஜீனியாவைச் சேர்ந்த கெல்லி லிண்ட்சே என்பவர் லாட்டரி சீட்டு வாங்க சென்றபோது தான் கேட்ட லாட்டரி சீட்டுக்கு பதிலாக வேறு சீட்டு கிடைத்ததாக வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் மாற்றி வாங்கப்பட்ட அந்த லாட்டரி சீட்டிற்கு $2 மில்லியன் டாலர் (ரூ.17,32,98,500) பரிசு விழுந்துள்ளது. தவறான லாட்டரி சீட்டை பெற்றபோதிலும், கெல்லி லிண்ட்சே சீட்டை உரசி பார்த்தபோது அந்த எண்ணுக்கு முதல் பரிசு விழுந்தது தெரியவந்துள்ளது. இதனால் வருத்தம் பறந்தோடியதாக லிண்ட்சே கூறியுள்ளார்.