தள்ளிப்போன சிபி சத்யராஜின் ‘டென் ஹவர்ஸ்’….. ரிலீஸ் குறித்த புதிய தகவல்!

3 hours ago
ARTICLE AD BOX

சிபி சத்யராஜின் டென் ஹவர்ஸ் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தள்ளிப்போன சிபி சத்யராஜின் 'டென் ஹவர்ஸ்'..... ரிலீஸ் குறித்த புதிய தகவல்!

நடிகர் சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் தமிழ் சினிமாவில் ஸ்டுடென்ட் நம்பர் 1, வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் இவர் ஜாக்சன் துரை, மாயோன் போன்ற பல வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இவர் டென் ஹவர்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. இப்படத்தினை இளையராஜா கலியபெருமாள் இயக்க ஃபைவ் ஸ்டார் நிறுவனமும் டுவின் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறது. ஜெய் கார்த்திக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிபி சத்யராஜுடன் இணைந்து கஜராஜ், ஜீவா ரவி, திலீபன், சரவணன் சுப்பையா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். தள்ளிப்போன சிபி சத்யராஜின் 'டென் ஹவர்ஸ்'..... ரிலீஸ் குறித்த புதிய தகவல்!ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து ட்ரெய்லர் போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேசமயம் இப்படமானது கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடும் போட்டியின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இப்படம் 2025 ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Read Entire Article