தள்ளிப் போகிறதா அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காதி' ?

16 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

'அருந்ததி' என்ற பேய் படத்தில் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவரின் சினிமா வாழ்க்கையில் 'பாகுபலி' முக்கிய படமாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'.

தற்போது இவர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் தனது 50-வது படமான "காதி" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர்கள் இருவரும் 2010-ம் ஆண்டு 'வேதம்' என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். காதி பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி வெளியாக உள்ளது.

இப்படம் பற்றிய அப்டேட்டை ஜனவரி மாதம் கொடுத்தனர். அதன்பின் எந்த அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படம் பற்றிய எந்தத் தகவலும் வராமல் இருப்பதால் படத்தைத் தள்ளி வைத்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Read Entire Article