ARTICLE AD BOX
புதுதில்லி: இண்டஸ்இண்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரியின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளுக்குப் பதிலாக, ஒரு வருடமாக நீட்டிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்ததை அடுத்து, இந்துஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 4 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தது.
இண்டஸ்இண்ட் வங்கியின் பங்கு தொடர்ந்து நான்காவது அமர்வாக 3.86 சதவிகிதம் சரிந்து ரூ.900.60 ஆக முடிவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் இது 3.71 சதவிகிதம் சரிந்து ரூ.901.95 ஆக முடிவடைந்தது.
இந்த அமர்வின் போது, பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் சரிந்து அதன் 52 வார குறைந்த விலையான ரூ.886.40 ஆக மும்பை பங்குச் சந்தையிலும் மற்றும் என்எஸ்இ-யில் ரூ.881.10 ஆக முடிந்தது.
அளவின் அடிப்படையில், இண்டஸ்இண்ட் வங்கியின் 1.60 கோடி பங்குகள் என்எஸ்இ-யில் வர்த்தகம் ஆன நிலையில், 4.49 லட்சம் பங்குகள் பிஎஸ்இ-யில் கைமாறியுள்ளது.
சுமந்த் கத்பாலியாவை 2025 மார்ச் 24 முதல் 2026 மார்ச் 23 வரை ஒரு வருட காலத்திற்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக இண்டஸ்இண்ட் வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
வாரியம் முன்மொழிந்ததை விட குறுகிய காலத்திற்கு மத்திய வங்கி ஒப்புதல் அளிப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு செப்டம்பரில், இண்டஸ்இண்ட் வங்கியின் இயக்குநர் குழு கத்பாலியாவுக்கு மூன்று ஆண்டுகள் மறுநியமனம் செய்ய பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உயர்ந்து முடிந்த சன் பார்மா பங்குகள்!