ARTICLE AD BOX
தலை முடியில் உள்ள நுனிப்பிளவை தவிர்க்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!!
பெண்களுக்கு தலை முடி பிரச்சனை என்பது அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. தலைமுடியை சரியாக பராமரிக்க தவறினாலும் இந்த பிரச்சனை இருக்கும். இந்நிலையில் தலைமுடியில் ஏற்படும் நுனிப்பிளவு பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
தலை முடியில் ஏற்படும் நுனிப் பிளவு பிரச்சனையை சரி செய்ய ஒரு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய் மூன்றை கலந்து லேசாக சூடு படுத்தி தலைமுடியில் தேய்க்க வேண்டும். உச்சந்தலையில் தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. தலைமுடியின் நுனிப்பகுதியில் தேய்த்தால் போதும். இவ்வாறு தேய்த்து அரை மணி நேரம் கழித்து ஷாம்பு யூஸ் செய்து தலையை அலசிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தலைமுடியில் ஏற்படும் நுனிப் பிளவு பிரச்சனையை தவிர்க்கலாம்.