‘தல’ நடிச்ச ‘விடாமுயற்சி’ கலெக்‌ஷன் ஸ்பீடு; ஸ்பெஷல் ஷோ பெர்மிஷன் படுஜோரு..

3 hours ago
ARTICLE AD BOX
vidaamuyarchi movie special screening permission granted

‘விடாமுயற்சி’ பட முன்பதிவு மற்றும் சிறப்பு அனுமதி பற்றிப் பார்ப்போம்..

‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ நாளை திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. முதல் நாளே படத்தை பார்த்துவிடும் ஆர்வத்தில் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

இதனால் முதல் நாள் ஷோக்களுக்கான டிக்கெட் முன்பதிவு மூலம் மட்டும் ரூ.12 கோடி கிடைத்திருக்கிறது.

மேலும், வார இறுதி நாட்களில் பலரும் டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்கிறார்கள். அதன் மூலம் ஒரு ரூ. 23 கோடி கிடைத்திருக்கிறது. நீண்ட காலமாகவே ரசிகர்கள் இப்படத்திற்காக காத்திருக்கும் நிலையில், தற்போது வெளியாக உள்ளது.

மேலும், 2 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகும் அஜித் படம் என்பதால், ரசிகர்கள் அமர்க்களமாய் இருக்கின்றனர். இந்நிலையில் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் குறித்து தற்போது குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது கட்அவுட், போஸ்டர் என இப்போதே ஏகே ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ‘விடாமுயற்சி’ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்புறமென்ன.. ‘தல’ சொன்னது மாதிரி பண்டிகை தான்.!

vidaamuyarchi movie special screening permission grantedvidaamuyarchi movie special screening permission granted

The post ‘தல’ நடிச்ச ‘விடாமுயற்சி’ கலெக்‌ஷன் ஸ்பீடு; ஸ்பெஷல் ஷோ பெர்மிஷன் படுஜோரு.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article