ARTICLE AD BOX
*கலெக்டர் ஆபீசில் புகார்
தர்மபுரி : தர்மபுரியில் ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திருப்பி கொடுக்காததால், பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
தர்மபுரி பிடமனேரி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் உள்பட 20க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, கலெக்டர் சதீஷிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பிடமனேரி அண்ணா நகர் பகுதியில். கடந்த 15 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏலச்சீட்டு நடத்தி வருகின்றனர். இவர்களிடம் சுற்றுவட்டார பகுதி மக்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஏலச்சீட்டில் சேர்ந்தனர். கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டதால், அண்ணா நகர் மற்றும் பிடமனேரி பகுதி மக்கள் ஆர்வத்தோடு ஏலச்சீட்டில் சேர்ந்தனர்.
ஆனால், சீட்டு முடிந்து முதிர்ச்சி அடைந்தும், பணம் திருப்பி தரவில்லை. பலபேருக்கு பணம் தரவில்லை. இதுகுறித்து சமீபத்தில் நியூ காலனியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர்.
அப்போது, சிலர் மிரட்டினர். ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலும் முதிர்ச்சி தொகை வழங்க வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் 2 சீட்டு மற்றும் 3 சீட்டுக்கு மேல் போட்டுள்ளனர். எனவே, பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் தங்கள் பெயரில் இருந்த சொத்துக்களை பினாமி பெயரில் மாற்றும்பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, கலெக்டர் உடனே நடவடிககை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post தர்மபுரியில் குடும்பமாக சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி மோசடி appeared first on Dinakaran.